பழனி முருகன் கோயிலில் நாளை முதல் ரோப் கார் சேவை இயங்காது
#India
#Temple
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago
பழனி முருகன் கோயிலில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆகஸ்ட் 19) முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது.
பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல மின்இழுவை இரயில், படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.