வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
#India
#Rain
#HeavyRain
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், இப்பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



