காஷ்மீரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவு
#India
#Earthquake
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.



