கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர்
#India
#Tamilnews
#Breakingnews
#ChiefMinister
#ImportantNews
Mani
2 years ago

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு வீட்டில் இருந்து சரியாக 8.45 மணியளவில் வந்தடைந்தார். அப்போது தமிழக போலீசார் தரப்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார். கொடியெற்றிய பின் உரையாற்றி வருகிறார். அதனைத்தொடர்ந்து கல்பனா சாவ்லா, அப்துல் கலாம் பெயரிலான விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்குகிறார்.



