டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து
#Death
#Student
#Delhi
#Breakingnews
#Died
#ImportantNews
Mani
2 years ago

டெல்லியில் அமைந்துள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவியர்கள் படித்து வருகின்றனர். இன்று, கல்லூரியின் உடற்கூறியல் பிரிவில் எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டது, உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் ஏழு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து, மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால், கல்லூரி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.



