சுவிட்சர்லாந்தில் பார ஊர்தி தீப்பற்றி எரிந்துள்ளது. எவரும் காயமடையவில்லை
#Switzerland
#Lanka4
#சுவிட்சர்லாந்து
#தீ_விபத்து
#fire
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago

சுவிட்சர்லாந்தின் சிஸ்சா என்ற இடத்தில் ஒரு பார ஊர்தி நேற்று பிற்பகல் ஏ2 நெடுஞ்சாலையில் தீ விபத்துக்குள்ளானது. இதனால் தீயணைக்கும் படையினர் அவ்விடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
பார ஊர்தி சாலையிலே இருந்ததால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயை அணைக்க முடிந்தாலும் பார ஊர்தியில் இருந்த சரக்கு முழுவதும் எரிந்து முடிந்தது.
இந்த தீ விபத்தில் எவரும் காயமடையவில்லை. மேலும் இவ்விபத்தானது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டிருக்கலாம் என அறியவருவதோடு தொடர்ந்து விசாரணைகள் நடைபெறுகிறது.



