மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

#India #Parliament #D K Modi
Prasu
2 years ago
மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20-ம் திகதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. 

இன்று மூன்றாவது நாளாக விதாம் நடைபெற்ற நிலையில், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தமையால் குரல் வாக்குப்பதிவின் மூலம் தீர்மானம் தோல்வியுற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!