சிங்கங்களைப் பாதுகாப்போம், அவற்றின் இனங்களின் தொடர்ச்சியை உறுதி செய்வோம் - பிரதமர் மோடி
#India
#PrimeMinister
#Delhi
#Minister
#Tamilnews
#ImportantNews
Mani
1 year ago

காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி, சிங்கங்கள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உலக சிங்கங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக சிங்க தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலக சிங்கங்கள் தினம் என்பது கம்பீரமான சிங்கங்களைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும். ஆசிய சிங்கங்களின் வாழ்விடமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அவற்றை மேலும் பாதுகாத்து மேலும் பல தலைமுறைகளை உருவாக்குவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பாடுபடும் அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.



