டெல்லி செங்கோட்டையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
#India
#Delhi
#Day
#Tamilnews
#Special Day
Mani
2 years ago

நாட்டின் சுதந்திர தினவிழா வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி செங்கோட்டை, ராஜ்காட், ஐ.டி.ஓ., ஆகிய பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், இந்த தடையை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர்.



