மஞ்சள் நிற பேருந்து இயக்கத்தினை நாளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
#India
#Tamil Nadu
#Tamil People
#Tamil Student
#Tamilnews
#ChiefMinister
#ImportantNews
Mani
2 years ago
தற்போது தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் மாநகர பேருந்துகளை இயக்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் அமைந்துள்ள எட்டு கோட்டங்களில் பழுதடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. எனவே இனி தமிழகத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது.
அவற்றின் நிறத்துடன் கூடுதலாக, பேருந்து இருக்கைகளும் விரிவாக இருக்க வேண்டும். இந்த பஸ் இயக்கத்தை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூர் ஆகிய நகரங்களில் தற்போது புதிய பேருந்துகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.