தொடர் விடுமுறை காரணமாக விமான கட்டணம் உயர்வு
#India
#Flight
#Airport
#Tamil People
#prices
#money
Mani
1 year ago

வரும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை விடுமுறை என்பதால், சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னையில் பஸ், ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்ட நெரிசலை தடுக்க, கூடுதல் பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கொச்சி, திருவனந்தபுரம் செல்வதற்கான விமானக் கட்டணம் ரூ.14 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. அதைபோல மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.



