ஹரியானா வன்முறைக்கு 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு
#India
#Police
#Attack
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

அரியானா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை, விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தின் மீது குறிப்பிட்ட நபர்களால் கற்கள் வீசப்பட்டன. இதனால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்தது. ஏராளமான வாகனங்கள், கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. நு மாவட்டத்தில் இருந்து அருகிலுள்ள குருகிராமுக்கும் பரவிய வன்முறையில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதன் விளைவாக இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களிலும், குருகிராமின் உட்பிரிவுகளிலும் ஆகஸ்ட் 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.



