காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது
#India
#Arrest
#Terrorist
#Tamilnews
#Breakingnews
#IndianArmy
Mani
2 years ago

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசாத்கஞ்ச் நகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த இரு பயங்கரவாதிகள், ராணுவ வீரர்களை கண்டதும் தப்பியோட முயன்றனர். எனினும், ராணுவ வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.
முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளும் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், சுதந்திர தினத்தின் போது பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு தெரியவந்தது.



