கத்திரிக்காயை எடுத்து இது போல தொக்கு செய்து பாருங்கள்!

#Tamil People #Recipe #Cooking #Tamilnews #Tamil Food
Mani
9 months ago
கத்திரிக்காயை எடுத்து இது போல தொக்கு செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய்

1 வெங்காயம்

1 தக்காளி      

3 பச்சை மிளகாய்

2 வெங்காயத்தாள்

6 பல் பூண்டு

கொத்தமல்லி சிறிதளவு

1 தேக்கரண்டி கரம் மசாலா

உப்பு தேவைக்கு ஏற்ப

1/2 கப் தேங்காய் துருவல்

செய்முறை:

வெங்காயம்,பச்சை மிளாகாய், தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை கழுவி விட்டு காம்பை நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்திருப்பவற்றை சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைக்கவும். வதக்கிஆற வைத்ததை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு தாளித்தவற்றுடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும். பின்பு மசாலாதூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அதன் பின்ன அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து சிம்மில் வைத்து நன்கு கிளறி விட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும், சுவையான கத்திரிக்காய் தேங்காய் தொக்கு ரெடி இதனை சாம்பார் சாதம், கீரை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். காரம் வேண்டுவோர் இதனுடன் மிளகு தூள் சேர்த்தும் சாப்பிடலாம்.