சிங்களவர்களால் தாக்கப்பட்ட இரு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதி
உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவை மீறி ஹெட்டிபொல பண்டுவஸ்துவர ரஜமஹா விகாரைக்குள் நுழைந்த இரண்டு பௌத்த சாதுக்களை விகாரையின் பங்களிப்பு சபையை சேர்ந்த சில சிங்களவர்கள் தாக்கியுள்ளனர்.
நேற்று மாலை நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பிக்குமார் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்று காரணமாக கலகெதர விபுலசார என்ற பிக்குவுக்கு விகாரைக்குள் செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்த நீதிமன்ற தடையை மீறி, குறித்த பிக்கு மேலும் ஒரு பிக்குவுடன் நேற்று விகாரைக்கு சென்றுள்ளார். பிக்கு விகாரைக்குள் வந்துள்ளதை அறிந்துக்கொண்ட விகாரையின் பங்களிப்பு சபையின் சிலர் விகாரைக்கு வந்து பிக்குமாரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்பட்டவில்லை.
ஹெட்டிபொல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.