இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இலங்கை பிரஜையொருவர் கைது!
#SriLanka
#Arrest
#Lanka4
Thamilini
2 years ago
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரஜை 10 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கட்டாருக்கு கொண்டு செல்வதற்காக தோஹா விமான நிலையத்திற்கு வருகை தந்தபொழுது, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தோஹா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளின் பயணப்பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த இலங்கையர் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. அவர் தற்போது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் தடுப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.