சென்னை மணலியில் உள்ள தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து

#India #fire #Tamilnews #Breakingnews #ImportantNews #Chennai #Bomb
Mani
2 years ago
சென்னை மணலியில் உள்ள தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே மணலி ஆண்டார்குப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீஞ்சூர், மணலி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக பரவியது. 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!