ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முக்கிய இரு நாடுகளுக்கு தடை!
#world_news
#Russia
Dhushanthini K
2 years ago

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டியில், 203 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த 203 நாடுகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் இடம்பெறாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளன.
இந்த நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நடுநிலையாளர்களாக ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி பெறலாம். எனினும் இது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என ஐஓசி தெரிவித்துள்ளது.
அமைதியான போட்டியில் உலகம் முழுவதையும் ஒன்றிணைப்பதே ஒலிம்பிக் போட்டிகளின் நோக்கம் என்று ஐஓசி தலைவர் தாமஸ் பாக் கூறியுள்ளார்.



