எதிர்ப்புகளுக்கு மத்தியில் 13 ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை!
13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான யோசனைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு தமிழ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், பெரும்பான்மை கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய அரசும் இந்த திருத்தத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைத்திருந்தது. இதனையடுத்து அண்மையில் சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது. இருப்பினும் இந்த கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.
இந்த சூழ்நிலையில், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து, ஜனாதிபதி நாடாளுமன்றில் அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
13வது அரசியலமைப்பை நடைமுறைபடுத்த ஜனாதிபதி முயற்சித்து வருகின்ற போதிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாதமையே ஜனாதிபதியின் பணிகளுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.