29 மாணவிகளை வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
29 மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்தமாதம் வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த உத்தரவை மட்டகளப்பு மேலதிக நீதவான் அன்வர் பிறப்பித்துள்ளார்.
குறித்த ஆசிரியர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவருக்காக எந்தவொரு சட்டதரணியும் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் குறித்த நபர், இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்தாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.