ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
#SriLanka
#Sajith Premadasa
#Ranil wickremesinghe
#Lanka4
Kanimoli
2 years ago
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை (02) நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு கூடவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவு மற்றும் கட்சி மாநாட்டை எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு எடுத்த தீர்மானம் நாளை (02) நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்
.
இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி மாநாடு நடைபெறும் இடம் மற்றும் மாநாட்டின் அமைப்புக் குழு ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.