ஒரேநாளில் 480 ரஷ்ய வீரர்களை கொன்றதாக உக்ரைன் அறிவிப்பு!
#Russia
#War
#Lanka4
Dhushanthini K
2 years ago

போரில் உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று ஒரேநாளில் 480 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், போர் நிறைவடைவதற்கான எத்தகைய அறிகுறிகளும் வெளிப்படவில்லை.
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தமாக 2,45,700 ரஷ்ய வீரர்கள் உக்ரைனிய ஆயுதப் படை வீரர்களால் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் இராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 14 ரஷ்ய டாங்கிகள், 11 கவச வாகனங்கள், 9 பீரங்கிகள், 1 விமான எதிர்ப்பு போர் அமைப்பு, 4 தந்திரோபாய ஆளில்லா வான்வழி வாகனங்கள், 28 டிரக்குகள் மற்றும் 1 யூனிட் சிறப்புப் படைகளை கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



