மின் கட்டணம் அதிகரிப்பினால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் நிலுவையில் உள்ள மின்கட்டணம் 240 லட்சம் ரூபா

#SriLanka #Hospital #Electricity Bill
Prathees
2 years ago
மின் கட்டணம் அதிகரிப்பினால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் நிலுவையில் உள்ள மின்கட்டணம் 240 லட்சம் ரூபா

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இரண்டு மாதங்களுக்கான நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் ரூ. 240 இலட்சம் மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மின்கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மாதாந்த மின்கட்டணம் சுமார் 80 இலட்சம் ரூபாவாக இருந்த நிலையில், மின்கட்டண அதிகரிப்புடன் மாதாந்த மின்கட்டணம் 120 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதன்படி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மின்சார சபைக்கு மாத மின் கட்டணம் ரூ. 120 இலட்சம் செலுத்த வேண்டியுள்ளது.

 இது தொடர்பில் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ். டி. வை. எம். ரங்கா, “மருத்துவமனையின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் மின் கட்டணம் செலுத்துவதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது.

 சுமார் இரண்டு மாத நிலுவையில் உள்ள மின் கட்டணம் செலுத்த வேண்டும். சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பணம் பெறப்பட்டவுடன், நிலுவையில் உள்ள மின் கட்டணம் செலுத்தப்படும்," என்று கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!