யாழ் அரியாலை பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மீட்பு!
#SriLanka
#Jaffna
#Lanka4
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 51 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரகிள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மேற்படி வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தல் காரணமாக கடல்சார் சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க கடற்படை தினசரி சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
குறித்த வெடிபொருட்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக மூழ்கடித்தவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான ஆஜர்படுத்தப்படும் வரை அவை கடற்படையினரின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.