போராட்டத்தின் போது தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை

#SriLanka #Bus #fire
Prathees
2 years ago
போராட்டத்தின் போது தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை

போராட்ட நாளில் திட்டமிட்டு எரித்து நாசம் செய்த அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்கத் தொடங்கியுள்ள அரசு, அன்று நாசப்படுத்தப்பட்ட வெளியாட்களின் வாகனங்கள்இ உடைமைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 போராட்ட தினத்தன்று அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வாடகை அடிப்படையில் அழைத்து வரப்பட்ட பேருந்துகள் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் திட்டமிட்ட குழுக்களால் தீயிட்டு அழிக்கப்பட்டன.

 இந்த பஸ்கள் உட்பட பல வாகனங்கள் இன்சூரன்ஸ் இழப்பீடு கூட கிடைக்காமல் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

 அரசியல்வாதிகளுக்கு காப்புறுதி நட்டஈடு மற்றும் அரசாங்க நட்டஈடு கிடைத்த போதிலும், உண்மையிலேயே ஆதரவற்ற நிலையில் உள்ள தங்களுக்கு அரசிடமிருந்து இழப்பீடு வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அழிந்த வாகனங்கள் மற்றும் சொத்துக்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 “அரசியல்வாதிகள் தங்கள் இழந்த சொத்துக்களுக்காக அதிகமதிப்பீடு செய்து பணம் எடுத்துள்ளனர்.

 ஆனால்,உண்மையில் ஆதரவற்ற நிலையில் உள்ள எங்களுக்கு இழப்பீடு ஒருபுறம் இருக்க, இழப்பு மதிப்பீடு கூட செய்யப்படவில்லை.

 சிலர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். அவர்கள் குத்தகையை செலுத்த வழியில்லை.

 போராட்டம் நடந்த அன்று கொழும்புக்கு வந்தோம். ஆனால் எங்கள் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. 

நாங்கள் இப்போது உண்மையில் ஆதரவற்றவர்கள். அரசியல்வாதிகள் அனைத்து தரப்பிலிருந்தும் நஷ்டஈடு பெற்று தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொண்டனர்.

 எம்மைப் பார்த்துக் கொள்ள எவரும் இல்லை' என சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!