வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள சுகாதார நிபுணர்கள்!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி சுகாதார நிபுணர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதைத் தடுக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியே இந்த அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கையை இரத்து செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சுகாதார செயலாளர் பதிலளிக்கவில்லை எனவும் அதனால் தான் இந்த வேலை நிறுத்தம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு இலட்சம் காண்டாக்ட் லென்ஸ்கள் கொள்வனவு நடவடிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.