இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

#SriLanka #prices #Lanka4 #kanchana wijeyasekara #petrol
Kanimoli
2 years ago
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

 அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

 அதன்படி, 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 லீட்டர் பெட்ரோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். இதேவேளை, ஒரு லீட்டர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.

 லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை லீட்டர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும். இதேவேளை, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 226 ரூபாவாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!