சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது

#India #China #Death #world_news #Flood #Tamilnews #Died
Mani
2 years ago
சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது

சீனாவின் புஜியான் மாகாணத்தை டொக்சூரி எனும் புயல் தாக்கியதில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே , சீனாவின் பல மாகாணங்களை டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

டோக்சூரி புயல் கரையை கடந்த போது பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த புயல் காரணமாக 178 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் , சுமார் ஆறாயிரம் ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது. இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!