பியர் தயாரிப்புகளுக்கு அரிசியைப் பயன்படுத்த தடை!
#SriLanka
#rice
#Food
Mayoorikka
2 years ago
விலங்குத் தீவனம் மற்றும் பியர் தயாரிப்புகளுக்கு அரிசியைப் பயன்படுத்தவதை உடனடியாக நிறுத்துவதற்கு கமத்தொழில் அமைச்சு முடிவு செய்துள்ளது.
தற்போது நிலவுகின்ற வரட்சி நிலைமையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் முகமாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு குழுவிற்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.