முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிரான வழக்கில் நீதிபதி நீல் இத்தவெல விலகல்

#SriLanka #Maithripala Sirisena #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிரான வழக்கில் நீதிபதி நீல் இத்தவெல விலகல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டினை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யும் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருந்து நீதிபதிகளில் ஒருவர் விலகியுள்ளதாக இன்று (31) தெரிவிக்கப்பட்டது.

 இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, ​​இந்த மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதியரசர் நீல் இத்தவெல இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

 அதன்படி, உரிய வெற்றிடத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் நியமிக்கப்படுவார் என்றும் தலைமை நீதிபதி அறிவித்தார். இதன்படி, நிஷங்க பந்துல கருணாரத்ன, சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, தம்மிக்க கணேபொல மற்றும் டி. என். சமரகோன் ஆகியோர் அடங்கிய ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் எதிர்வரும் ஒக்டோபர் 16, 17, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசாரணை நடத்துவதற்கு திகதிகள் நிர்ணயிக்கப்பட்டன.

 ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் கொலை மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் இருவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தனர். 

 இந்த முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்தார். இந்த அழைப்பாணை சட்டவிரோதமானது என்றும் அது தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு செல்லுபடியற்றது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!