பிரிக்ஸ் மாநாட்டில் கைது செய்யப்படக்கூடும்: இணையவழி மூலம் பங்கேற்கும் புடின்

#world_news #Russia #Lanka4 #லங்கா4 #SouthAfrica #Visit
பிரிக்ஸ் மாநாட்டில் கைது செய்யப்படக்கூடும்:  இணையவழி மூலம் பங்கேற்கும் புடின்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளதால், அவர் தென்னாபிரிக்க பயணத்தினை தவிர்ப்பார் என்றும் அதற்கான விளக்கத்தினை அளித்துள்ளார்.

உக்ரைன் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறுவா்களை தங்களது பகுதிகளுக்கு சட்டவிரோதமாக ரஷ்யா கடத்திச் சென்றதாக நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி அறிவித்தது.

 இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபா் புதின், அந்த நாட்டின் குழந்தைகள் நல ஆணையா் மரியா லவாவோ-பெலோவா ஆகிய இருவரும் போா்க் குற்றவாளிகள் என்று அறிவித்த அந்த நீதிமன்றம், அவா்களுக்கு எதிராக கைது உத்தரவையும் பிறப்பித்தது.

 இந்நிலையில், இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாடு ஆகஸ்ட் 22 முதல் 24-ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் நடைபெறவிருக்கிறது.

 இதில், ரஷ்ய அதிபா் புதின் பங்கேற்றால் அவா் சா்வதேச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஏனெனில், அந்த நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவா்களைக் கைது செய்து நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்றாகும்.

 பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யா சாா்பில் அதிபா் புதினுக்கு பதிலாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என அறிவிக்கப்பட்டது. கைது அச்சத்தால் தென் ஆப்பிரிக்க பயணத்தை புதின் ரத்து செய்ததாக கூறப்பட்டது.

 இந்நிலையில், ரஷ்ய அதிபா் மாளிகையில் செய்தியாளா்களைச் சந்தித்த புதின் இது தொடா்பாக கூறியதாவது: இப்போதைய சூழ்நிலையில் மாநாட்டுக்குச் சென்று பங்கேற்பதைவிட, ரஷ்யாவில் இருப்பதுதான் முக்கியமானது.

 இந்த மாநாட்டில் விடியோ கான்பரன்சிங் மூலம் ரஷ்யாவில் இருந்தபடி பங்கேற்பேன். ரஷ்யா சாா்பில் அமைச்சா் லாவ்ரோவ் மாநாட்டில் பங்கேற்பாா் என்றாா்.

பிரிக்ஸ் கூட்டணியை மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு முடிகட்ட ரஷ்யா எடுத்த முன்னெடுப்பானது இம்முறை புதினின் நேரில் பங்கேற்காத விடயத்தால் ரஷ்ய முயற்சி பின்னடைவு அடையக்கூடும் என கருதப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!