சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்!

#SriLanka #Mannar #Protest
Mayoorikka
2 years ago
சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்!

மக்களின் குரலாக தொடர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி வடகிழக்கு மக்களாகிய நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டு இருப்போம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

 ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து வந்த செயலமர்வின் ஒரு வருட நிறைவை நினைவு கூறும் வகையில் இன்று திங்கட்கிழமை (31) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கடந்த ஒரு வருட நிறைவை நினைவு கூறுகின்றோம். 

 கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் நாளை 1 ஆம் திகதியுடன்(1-08-2023) ஒரு வருடம் பூர்த்தியாகிறது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி 100 நாள் செயலமர்வை நடத்தி இருந்தோம். 

 அதன் விளைவாக மக்கள்,பல்வேறு குழுக்கள்,சிவில் சமூகம் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடி நாங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றோம். பல்வேறு நாடுகளுக்கும் அறிக்கையை சமர்பிக்கின்றோம். 

மக்களுடைய தேவை பாட்டிற்குள் இந்த நாட்டில் சமஸ்டி முறையிலான மீள பெற முடியாத ஒரு தீர்வை அதுவும் சர்வதேச நாடுகள், அமெரிக்கா, கனடா,அவுஸ்திரேலியா,இந்தியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய விடையங்களை கலந்து ஆலோசித்து அதற்குள் உகந்ததை இலங்கைக்குள் இங்கு வாழ்கின்ற தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையாக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வட கிழக்கில் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வலியுறுத்தி அதிகார பகிர்வுக்கான மக்கள் குரல் செயலமர்வின் ஒரு வருட நிறைவை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.

 மக்களின் குரலாக தொடர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி வடகிழக்கு மக்களாகிய நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டு இருப்போம். 

 இவ்விடயத்தில் அரசும் சர்வதேசமும் தொடர்ந்து கண்ணோக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

images/content-image/2023/07/1690790807.jpg

images/content-image/2023/07/1690790741.jpg

images/content-image/2023/07/1690790697.jpg

images/content-image/2023/07/1690790660.jpg

images/content-image/2023/07/1690790615.jpg

images/content-image/2023/07/1690790539.jpg

images/content-image/2023/07/1690790476.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!