கிளிநொச்சியில் இலவச நீச்சல் பயிற்சி முகாம் ஆரம்பம்! விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும்
கிளிநொச்சியில் இலவச நீச்சல் பயிற்சி முகாம் கிளிநொச்சி நீர் விளையாட்டு சங்கத்தின்(KASA) ஒழுங்கமைப்பில் இன்று(31) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த சர்வதேச நீச்சல் பயிற்றுனர் தம்போ பஞ்சரட்ணம் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் தம்போ பஞ்சரட்ணம் நீச்சல் பயிற்சிக்கான ஒரு தொகுதி உபகரணங்களை கையளித்திருந்தார்.
இன்று தொடங்கிய இலவச நீச்சல் பயிற்சி முகாம் எதிர்வரும் 18.08.2023ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. பங்குகொள்ள விரும்புபவர்கள் 076 6889330 அல்லது 076 9832101 ஆகிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஒழுங்கமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், KASA நிர்வாக அங்கத்தவர்கள், நீச்சல் பயிலுனர்கள் உள்ளிட்ட பல்வேறுதரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.






