மின்சார உற்பத்தி தடை: மீண்டும் மூன்று மணிநேர மின்வெட்டு
சமனல குளம் மற்றும் உடவலவ நீர்த்தேக்கங்களின் போதிய அளவு நீர் கொள்ளளவு இல்லாததால் விவசாய நடவடிக்கைகள் மற்றும் மின்சார உற்பத்தி அடுத்த காலப்பகுதிக்குள் தடைபடலாம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த வாரத்தில் மட்டும் மொத்தமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு பத்து நாட்களுக்குத் தேவையான நீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில், இந்த நீர்த்தேக்கம் எதிர்பார்த்த மழையில் 50% நீர் கொள்ளளவு பெற்றிருந்தது.
அதன்படி, போதிய நீர் இருப்பு இல்லாததால், அடுத்த வாரத்தில் இந்த இழப்புகள் ஏற்படப் போவதுடன், மின் உற்பத்தி தடைபடுவதால், இழப்பு மேலும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டால் தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் மூன்று மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.