ஈஸ்டர் தாக்குதலில் சதி! சஹாரானின் தொலைபேசியை கைப்பற்றிய அமெரிக்க உளவுத்துறை
#SriLanka
#Sri Lanka President
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Mayoorikka
2 years ago
ஈஸ்டர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹாரான் ஹாசிமின் கைத்தொலைபேசி அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் கைப்பற்றப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சதி இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா, சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகள் விசாரணைக்கு வந்ததாகவும், சில நாடுகள் விசாரணை அறிக்கைகளை வழங்கியதாகவும், சிலர் விசாரணை அறிக்கைகளை வழங்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சஹாரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்க தொலைபேசி மற்றும் சில சோதனை அறிக்கைகள் குறித்து தன்னிடம் கேட்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.
தேசிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.