நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! ஜனாதிபதி வழங்கிய உறுதி

#SriLanka #Sri Lanka President #doctor #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! ஜனாதிபதி வழங்கிய உறுதி

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்குவதாக ஜனாதிபதி தமது தொழிற்சங்கத்திற்கு உறுதியளித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே சங்கத்தின் பிரதிச் செயலாளர் ஹரித அலுத்கே இவாறு தெரிவித்துள்ளார்.

 பொருளாதார நெருக்கடி காரணமாக பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தூண்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதிச் செயலாளர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

 நாடு முழுவதிலும் உள்ள ஏராளமான நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் உள்ளூர் மருத்துவமனைகளின் பல துறைகளில் தற்போது  பணி வெற்றிடங்கள் உள்ளன. 

இந்நிலை தொடர்ந்தால், முன்னேறிய நிலையில் இருந்த நாட்டின் பொது சுகாதார அமைப்பு, 90களின் நிலைக்கு பின்வாங்கும் என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!