சர்வதேசத்தில் ஈழம் இருக்கும் போது கூட்டமைப்பினர் அரசியலிற்காக தனிநாடு கோருகின்றனர்!
#SriLanka
#Sri Lanka President
#Udaya Kammanpila
Mayoorikka
2 years ago
புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச சமூகத்தில் ஈழ இராச்சியத்தை உருவாக்கி அதன் பிரதமராக ‘ருத்ரகுமாரன்’ என்ற சட்டத்தரணி நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப தனிநாடு அமைப்பதற்கான தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கம்மன்பில குற்றஞ்சாட்டுகின்றார்.
இதையெல்லாம் பார்க்கும் போது நாடு பாரிய ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.