அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அடக்குமுறைக்கு எதிராக மக்கள் அணித்திரள வேண்டும்!
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அடக்குமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் எனதேசிய மக்கள் சக்தி (NPP) வலியுறுத்தியுள்ளது.
அடக்குமுறை ஆட்சியை மக்கள் சக்தி நிச்சயமாக தோற்கடிக்கும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசாங்கம் பொதுப் போராட்டங்களைத் தாக்கி, போராட்டக்காரர்களைக் கைது செய்யத் தொடங்கியுள்ளது, கடைசியாகப் பாதிக்கப்பட்டவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர் எனவும் கூறினார்.
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மக்களுக்கு எதார்த்தத்தை அம்பலப்படுத்தி வருவதாகவும், ஜனாதிபதியாக வருவதற்கு எந்தவிதமான பொது ஆணையும் இல்லாத ரணில் விக்ரமசிங்கவிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்த அநுர குமார திஸாநாயக்க அவரைக் கைது செய்ததில் சம்பந்தப்பட்ட பொலிஸார்சட்டப்பூர்வமாக கையாளப்பட வேண்டும் என்றும் கூறினார்.