பெத்துல்லா பயங்கரவாத அமைப்பை ஒடுக்குவதற்கு இலங்கை புலனாய்வு அமைப்புகள் ஆதரவு
இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோகும் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பாஸா குலேரைச் சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Fethullah Gulen குழுவின் தலைமையிலான Fethullah பயங்கரவாத அமைப்பை ஒடுக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பை துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் பாராட்டியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.