உலகில் எந்த நாட்டிலும் தரம் குறைந்த மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை: மருத்துவ நிபுணரின் அறிக்கை

#SriLanka #doctor #Medicine
Prathees
2 years ago
உலகில் எந்த நாட்டிலும் தரம் குறைந்த மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை: மருத்துவ நிபுணரின் அறிக்கை

உலகில் எந்த ஒரு நாடும் தரக்குறைவான மருந்து வகைகளை உற்பத்தி செய்வதில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி ஊடகப் பிரிவினருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, ​​அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நாடுகளில் மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளையே சுகாதார அமைச்சு இலங்கைக்கு கொண்டு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 நாட்டில் மருந்துகளை கொள்வனவு செய்ய பணம் இல்லாத காரணத்தினால் இலங்கைக்கு மருந்துகளை உதவியாக கொண்டு வந்ததாக வைத்தியர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

 இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த மருந்துகளுக்கு அமெரிக்க சான்றிதழ் மாத்திரம் கிடைக்குமா என்பது குறித்து ஆராயப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்தார்.

சுகாதாரத்துறையை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல அனைவரினதும் பொறுப்பாகும்  என  ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரட்ணசிறி ஹேவகே மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!