கெசல்வத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு
#SriLanka
#Colombo
#GunShoot
Prathees
2 years ago
கொழும்பு கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதிக்கு அருகில் நின்றிருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கெசல்வத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு 12 ஐச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெசல்வத்தை பொலிஸார் முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.