இரத்தினக்கற்கள் மற்றும் இல்லம் மண் என சந்தேகிக்கப்படும் பொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது
இரத்தினக்கற்கள் மற்றும் இல்லம் மண் என சந்தேகிக்கப்படும் பொருட்களை கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் முந்தலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தலம் பிரதேசத்தில் இரத்தினக்கற்களுக்கு ஒத்த பாறைகள் மற்றும் இல்லம் மண் என சந்தேகிக்கப்படும் ஒரு வகை மண் அடங்கிய பையை காரில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம்-கொழும்பு வீதியில் சென்றுகொண்டிருந்த காரை சோதனை செய்யும் வேளையில் முந்தலம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் குறித்த பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் காரின் சாரதியிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்களை வழங்கியமையினால் குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பாறைகள் மற்றும் மண்ணை சந்தேக நபர் காரில் ஏற்றிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் முனமல்தெனியஇ ஹுனுபொல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.