தென் மாகாணத்தில் மின்சாரம் தடைப்படும்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற தோட்டக்கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து 10 நாட்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் 1 மணித்தியாலம் முதல் 03 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது நீடிக்கும் காலநிலையால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.