விலை இல்லாத பொருட்களை இலவசமாகப் பெறுங்கள்: நுகர்வோர் அதிகாரசபை தெரிவிப்பு
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி, விற்பனைக்கான ஒவ்வொரு பொருளின் விலையும் குறிக்கப்பட வேண்டும் அல்லது காட்டப்பட வேண்டும். ஆனால் சந்தையை அவதானிக்கும் போது இது முறையாக மேற்கொள்ளப்படாததால் பல்வேறு விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால் நுகர்வோர் அதிகாரசபை இந்த நாட்களில் பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்படாமை தொடர்பான சட்டத்தை மிகக் கடுமையாக அமுல்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், கோதுமை மா பொதிகளின் விலை குறிப்பிடப்படாதமை தொடர்பில் நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனங்களான Prima மற்றும் Serendib நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புறக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் விலைகள் காட்சிப்படுத்தப்படாதது தொடர்பில் அண்மையில் சோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தின்படி, பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை ஒவ்வொரு இடத்திலும் விற்பனைக்கு வைக்கப்படும் ஒவ்வொரு பொருளின் விலையையும் குறிக்க வேண்டும் அல்லது காட்சிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யாத இடங்கள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் தொடர் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டு, பொருட்களின் விலைகள் குறிக்கப்படாமலோ அல்லது காட்சிப்படுத்தப்படாமலோ இருந்தால், அவை இலவசமாக விநியோகம் செய்யப்படும் பொருட்களாக இருக்கலாம், விற்பனைக்கு அல்ல.
அதன்படி, பொருட்களை வாங்கும் போது, உரிய விலை குறிக்கப்பட்ட அல்லது காட்சிப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். விலை குறிப்பிடப்படாத அல்லது காட்சிப்படுத்தப்படாத இடங்களிலிருந்து உரிய பொருட்களை உரிமையாளர் இலவசமாக கோர வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"விலை காட்சி இல்லாமல் இலவச பொருட்களைப் பெறுங்கள்" என்ற வாசகத்தை சமூகமயமாக்குவதன் மூலம் சந்தையில் பொருட்களின் விலைகளைக் குறிப்பது அல்லது காட்சிப்படுத்துவது மிகவும் வெற்றிகரமாக செய்ய முடியும் என்று தான் நம்புவதாக மூத்த விசாரணை அதிகாரி மேலும் கூறினார்.