அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த சாரதிகள் இருவர் கைது

#SriLanka #Arrest #Police #Kilinochchi #Lanka4
Kanimoli
2 years ago
அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த சாரதிகள் இருவர் கைது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் அதிரடி முடிவால் 29.07.2023 அன்று குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அத்துடன் சுண்டி குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 11 முதிரை மரக் குட்டிகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போலிஸ் விசாரணை பின்னர் போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 

எதிர்வரும் 03.08.2023 அன்று தடைய பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தருமபுரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் .சதுரங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!