உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவதும் ஒரு கலைதான்!
உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவது ஒரு கலை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் பலமான உறவை பேணிவரும் பண்டாரநாயக்காவிற்கு பின்னர் அரச தலைவர் தாம் மட்டுமே என தெரிவித்தார்.
“அது ADB ஆக இருக்கலாம், IMF ஆக இருக்கலாம், உலக வங்கியாக இருக்கலாம், ஜப்பான் JICA ஆக இருக்கலாம், அனைவருடனும் சுமூகமான உறவை பேணி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்காவுக்குப் பிறகு உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் வலுவான உறவைப் பேணி அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றவன் நான். ரஷ்யாவும் ஒன்றே, சீனாவும் ஒன்றே, அமெரிக்காவும் ஒன்றே, ஐரோப்பாவும் ஒன்றே, இந்தியாவும் ஒன்றே, ஜப்பானும் ஒன்றே, ஜேர்மனியும் ஒன்றே, எனத் தெரிவித்த அவர். இலங்கையில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் பற்றிய கோப்பு தூதரகங்களில் உள்ளது” என்றும் கூறினார்.