இலகுரக ரயில் திட்டம் உட்பட ஜப்பானின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதில் கவனம்

#SriLanka #Ranil wickremesinghe #Japan
Prathees
2 years ago
இலகுரக ரயில் திட்டம் உட்பட ஜப்பானின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதில் கவனம்

இலங்கையில் உயர்தொழில்நுட்ப தொழில்கள் தொடர்பான முதலீட்டு வாய்ப்புகளுக்காக ஜப்பானிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று தெரிவித்தார்.

 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து ஆரம்பமான இந்த கலந்துரையாடலில், பல துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 இலங்கையில் கடன் மேம்படுத்தல் செயற்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 மேலும், இலகு ரயில் திட்டம், துறைமுக கிழக்கு முனையம்,கண்டி அபிவிருத்தி திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலையை விரைவுபடுத்துவது மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய திட்டங்களின் விஸ்தரிப்பு குறித்தும் இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரும் பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர், 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை அமைதியான மற்றும் நிலையான பிராந்தியமாக பேணுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

 இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

 இந்த சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட நட்புறவு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இருவரது கவனமும் ஈர்க்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!