கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்துவுக்கு பிணை
#SriLanka
#Colombo
#Court Order
#Journalist
Prathees
2 years ago
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பிணையில் விடுவிக்க அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொரளை பொலிஸார் தரிந்து உடுவரகெதரவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் போராட்ட மையம் மற்றும் கூட்டு வளர்ச்சி அலுவலர் மையம் நேற்று நடத்திய போராட்டத்தில் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று இரவு பொரளை பொலிஸ் நிலையத்திற்கு வந்து நலம் விசாரித்து ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பாக, தேசிய மக்கள் சக்தி நடத்திய செய்தியாளர் சந்திப்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.