வேகமாகச் சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்து - ரஷ்யர் உட்பட இருவர் பலி
#SriLanka
#Death
#Accident
Prathees
2 years ago
கண்டி - மீமுரே வீதியில் உடுதும்பர, புஸ்சீல வளைவில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய பிரஜை ஒருவரும் வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் மத்திய கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.