கேரளாவில் அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது, அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்
#India
#Accident
#Bus
#fire
#Tamilnews
#Breakingnews
#Kerala
#ImportantNews
Mani
2 years ago

கேரள மாநிலம் செம்பகமங்கலம் அருகே அட்டிங்கல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது, டிரைவர் விரைவாக பஸ்ஸை நிறுத்தி அனைத்து பயணிகளையும் வெளியேற்றினார்.
சில நிமிடங்களில் பேருந்து எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ் டிரைவரின் திறமையால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



